செய்திகள்
கொரோனா வைரஸ்

2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியைக்கு கொரோனா

Published On 2021-10-27 10:42 IST   |   Update On 2021-10-27 10:42:00 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் கொரோனா தாக்கம் குறைந்தது. எனவே நவம்பர் 1- ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அனைத்து துறையை சேர்ந்தவர்களும் கொரோனா தடுப்பூசிபோட அறிவுறுத்தப்பட்டது.

அதன்பேரில் பெரும்பாலான ஆசிரியர்கள் தடுப்பூசிபோட்டுக்கொண்டனர். மேலும் பள்ளிகள் திறப்புக்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடலூர்மாவட்டத்தில் ஒருசில ஆசிரியருக்கு கொரோனா ஏற்பட்டு வந்ததையடுத்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த ஆசிரியை ஏற்கனவே 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்.

அதனை தொடர்ந்து ஒறையூர் அரசு ஆரம்ப சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் எவ்வித தொற்று பாதிப்பும் இல்லை என உறுதியானது.

மேலும் ஆசிரியை குடும்பத்தினருக்கும் மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டதில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தெரியவந்தது.

Similar News