செய்திகள்
ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

புதுக்கோட்டையில் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

Published On 2021-06-13 17:01 IST   |   Update On 2021-06-13 17:01:00 IST
புதுக்கோட்டை எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை.முத்துராஜாவின் சட்டமன்ற அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு, எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினர். அனைவரும் சட்டமன்ற அலுவலகத்தில் கலைஞரின் புகைப்படத்துக்கு மலர் தூவி வணங்கினர். 



அதன்பின்னர் எம்எல்ஏ முத்துராஜா தனது இருக்கையில் அமர்ந்து பணிகளை தொடங்கினார்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர், கே.கே.செல்லப்பாண்டியன், நகர செயலாளர் நைனா முகமது. இளைஞர் அணி அமைப்பாளர் ஷண்முகம். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முல்லை முபாரக், சுதாகர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

Similar News