செய்திகள்
யானைக்கு உணவளிக்கும் டிஎஸ்பி பொன் ரகு

ஊரடங்கால் தவிக்கும் யானை- தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் போலீஸ் டி.எஸ்.பி

Published On 2021-06-03 12:48 IST   |   Update On 2021-06-03 12:48:00 IST
திருப்பத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. பொன்ரகு. இவர் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு, மளிகை பொருட்கள், நிதியுதவி உள்ளிட்டவைகளை செய்து வருகிறார்.
திருப்பத்தூர்:

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் போலீசாரும் தங்களால் இயன்ற உதவிகளை எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. பொன்ரகு. இவர் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு, மளிகை பொருட்கள், நிதியுதவி உள்ளிட்டவைகளை செய்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக தெரு விலங்களும் உணவின்றி பரிதவித்து வந்தன. இதையடுத்து டி.எஸ்.பி. ரகு அவைகளுக்கும் தன் முயற்சியில் உணவளித்து வருகிறார்.

அதன்படி திருப்பத்தூர் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோவில் யானை, வன பகுதிகளில் சுற்ற திரியும் குரங்ககள், தெரு நாய்களுக்கு பழங்கள், உணவு, பிஸ்கட் போன்றவைகளை வழங்கி வருகிறார்.

போலீஸ் டி.எஸ்.பி. இந்த செயலை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.




Similar News