செய்திகள்
குரங்குகளுடன் ராமலிங்கம்

குரங்குகளுக்கு உணவு வழங்கி வந்த முதியவர் கொரோனாவுக்கு பலி

Published On 2021-05-26 09:59 GMT   |   Update On 2021-05-26 09:59 GMT
குரங்குகளின் மீது அன்பை செலுத்தி வந்த முதியவர் ராமலிங்கம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா கோரப்பிடியில் சிக்கி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அடுத்துள்ள வடவள்ளியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). இவர் கடந்த ஆறு வருடங்களாக தனது வீட்டில் பின்புறம் இருக்கும் தோட்டத்தில் குரங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுகளை வழங்கி வந்துள்ளார்.

இதனால் நாளடைவில் குரங்குகள் இவருடன் சகஜமாக பழக ஆரம்பித்தது. பிறகு குரங்குகளுக்கு பழங்கள் பட்டாணி, சுண்டல் போன்றவைகளை கொடுத்து வந்துள்ளார். குரங்குகளும் மிகவும் சகஜமாக அவர் தோள் மீது ஏறிக்கொண்டு நண்பன் போல் விளையாடி வாழைப்பழம் மாம்பழம் போன்றவைகளை கேட்டு வாங்கி சாப்பிட ஆரம்பித்தது.

தினமும் காலையில் இவரை தேடி வரும் குரங்குகள் மாலையில் வனப்பகுதிக்குள் சென்று விடும். சக மனிதனுடன் அன்பு பாராட்டுவது குறைந்துவரும். இந்த சூழ்நிலையில் குரங்குகளின் மீது அன்பை செலுத்தி வந்த முதியவர் ராமலிங்கம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா கோரப்பிடியில் சிக்கி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் உயிரிழந்தது தெரியாமல் இன்று காலை அவரை தேடி வந்த குரங்குகள் கூட்டம் அவர் இன்னும் வரவில்லை என மரங்களின் மீது கூச்சலிட்டு வருகின்றது.


Tags:    

Similar News