செய்திகள்
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதலமைச்சர் 5ம் கட்ட பிரசாரம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 5-ம் கட்ட பயணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
வேலூர்:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று அவர் 5-ம் கட்ட பயணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
அரக்கோணம் தொகுதி கைனூர் கணபதி நகரில் 10.30 மணிக்கு மகளிருடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஏராளமான பெண்கள் அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் செய்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பின்னர் 11.20 மணிக்கு சோளிங்கர் தொகுதி பாண்டிய நெல்லூரில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அதை தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளையொட்டி அந்த பகுதியில் அ.தி.மு.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் பிற்பகல் 4 மணி அளவில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி கந்தநேரியில் மகளிருடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மாலை 5 மணிக்கு கே.வி.குப்பம் தொகுதியில் சென்றாயன் பள்ளியில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.
அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். வேலூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் இடத்தில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு களைக்கட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். ஆம்பூர் தொகுதியில் ஆம்பூர் புறவழிச்சாலையில் 8.30 மணிக்கு மகளிருடன் ஆலோசனைக் கூட்டத்திலும், வாணியம்பாடி தொகுதியில் 9.45 மணிக்கு இஸ்லாமிய கல்லூரி எதிரில் இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
11 மணிக்கு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகே பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் வரவேற்பு பதாகை வைத்து கட்சி கொடிகள் கட்டியுள்ளனர். இதனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழிநெடுகிலும் நின்று கண்காணித்து வருகின்றனர்.