சினிமா செய்திகள்

மங்காத்தா அலையில் அடித்து செல்லப்பட்ட திரௌபதி 2 - வேதனையுடன் வீடியோ வெளியிட்ட மோகன் ஜி

Published On 2026-01-24 18:37 IST   |   Update On 2026-01-24 18:37:00 IST
  • மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை
  • மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை

2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்ற மங்காத்தா திரைப்படம் நேற்று ரீரிலீஸானது.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் ரீ ரிலீசில் கில்லி படம் படைத்த சாதனைகளை முறியடித்து வசூல் சாதனை படைத்தது வருகிறது.

மங்காத்தா படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் நேற்று வெளியான திரௌபதி 2 படத்தை மக்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்ட்டது.

இந்நிலையில், மங்காத்தா அலையில் திரௌபதி 2 படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "திரெளபதி2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு.. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை.. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை.. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை.. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள்.. திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன்.. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் G" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News