செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கு 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதில் பணம்- கவர்னர் ஒப்புதல்

Published On 2020-11-08 12:26 IST   |   Update On 2020-11-08 12:26:00 IST
தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைக்காக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தலா 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் வழங்கும் கோப்பிற்கு நிபந்தனையுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை அமைச்சரவையின் முடிவுகள் மற்றும் திட்ட செலவினங்களுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அதன்படி கடந்த வாரம் கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட 22 கோப்புகளில் 19 கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில், தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைக்காக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தலா 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் வழங்கும் கோப்பிற்கு நிபந்தனையுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசு வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி. செலுத்துவோரை தவிர, மற்ற அனைவருக்கும் இலவச சர்க்கரை வழங்க அனுமதி வழங்கியுள்ளார்.

அரசு அச்சகம் மூலம் ஆண்டு தோறும் அச்சிடப்படும் அரசு காலண்டர், டைரி பிரிண்ட் செய்வதற்காக ரூ.1 கோடியே 14 லட்சத்து அனுமதி கேட்டு அனுப்பிய கோப்பிற்கு கவர்னர் கிரண்பேடி அனுமதி தர மறுத்துள்ளார். இந்த கோப்பை மத்திய உள்துறையின் முடிவுக்கு கவர்னர் பரிந்துரை செய்துள்ளார்.

சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் சம்பளத்திற்கு ரூ. 75 லட்சத்து 72 ஆயிரம் வழங்கவும், 2 சாராயக்கடை 12 கள்ளுக்கடைகளுக்கு மின்னணு ஏலம், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பணி இடங்கள் ஒதுக்கீடு மற்றும் இடமாற்றம், பாட்கோ ஊழியர்கள் மற்றும் அலுவலக செலவினத்துக்கு ரூ. 1 கோடியே 97 லட்சம் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Similar News