செய்திகள்
இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு: ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் புகார்

Published On 2020-09-07 12:35 GMT   |   Update On 2020-09-07 12:35 GMT
இந்தியை தாய் மொழியாக கொண்டவருக்கு இந்தி பிரிவில் பணி ஒதுக்காமல் எனக்கு திட்டமிட்டு ஒதுக்கப்படுவதாக ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் ஜிஎஸ்டி உதவி ஆணையராக பாலமுருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் எழுத படிக்க தெரியும்.

இருந்த போதிலும், இந்தியை தாய் மொழியாக கொண்டவரை இந்தி பிரிவில் பணி ஒதுக்காமல் எனக்கு திட்டமிட்டு ஒதுக்கப்படுவதாக புகார் அளித்துள்ளார்.

மத்திய மறைமுக வரிகள் வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘‘இந்தியை தாய் மொழியாக கொண்டவரை இந்தி பிரிவில் பணி ஒதுக்காமல் எனக்கு திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறது. விருப்பம் இல்லாத ஒருவரை இந்தியை பரப்ப வேண்டும் என்று நிர்பந்திப்பதும் கூட இந்தி திணிப்பே’’ என்று புகார் அளித்துள்ளார்.
Tags:    

Similar News