செய்திகள்
மதுராந்தகம் ஒன்றியத்தில் ஏரியில் மண் அள்ளும்போது சிக்கிய சிவலிங்கம்.

ஏரியில் மண் அள்ளும்போது 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது

Published On 2020-09-06 16:38 IST   |   Update On 2020-09-06 16:38:00 IST
மதுராந்தகம் ஒன்றியத்தில் ஏரியில் மண் அள்ளும்போது 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டூர் ஊராட்சிக்குட்பட்ட மதுராகுருவாபதன்மேடு கிராமத்தில் ரூ.40 லட்சம் செலவில் ஏரி குடிமராமத்து பணி நடந்து வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் உள்ள மண்ணை அள்ளி கரையில் போட்டனர்.

அப்போது பொக்லைன் எந்திரத்தில் 6 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இதனை கேள்விப்பட்ட அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். சிலையை ஏரிக்கரை அருகே வைத்து வழிபாடு செய்தனர். மதுராகுருவாபதன்மேடு கிராமத்தில் சிவன் கோவிலோ, பெருமாள் கோவிலோ இல்லாத நிலையில் அங்கு சிவலிங்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News