செய்திகள்
புதுவையில் மேலும் 7 கட்டுப்பாட்டு மண்டலம்
புதுவையில் மேலும் 7 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.மேட்டுப்பாளையம் ராம்நகர் முதல் குறுக்குத்தெரு, 2.தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், 3.தர்மாபுரி கலைவாணர் வீதி, 4.தட்டாஞ்சாவடி இஸ்ரவேல் நகர், நேசர் வீதி, 5.பூமியான்பேட்டை ஜவகர் நகர் கே பிளாக், 6.காலாப்பட்டு கனகசெட்டிக்குளம் வடக்கு வீதி, 7. காலாப்பட்டு புதுச்சேரி பல்கலைக்கழக வளாகம் டி பிளாக் ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.