செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரி சட்டசபை வளாகத்தை 3 நாட்களுக்கு மூட உத்தரவு

Published On 2020-07-26 08:55 GMT   |   Update On 2020-07-26 08:55 GMT
புதுச்சேரி சட்டசபை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், சட்டசபை வளாகத்தை 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளரான பாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது கட்சி என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ.வுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பது அவரது கட்சியினரை மட்டுமின்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி கட்சி பிரமுகர்கள், பொதுமக்களை கலக்கமடைய வைத்துள்ளது. இந்தநிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட என்.எஸ்.ஜே. ஜெயபால் எம்.எல்.ஏ. மற்ற எம்.எல்.ஏ.க்களுடன் சகஜமாக பேசி வந்துள்ளார். இதையொட்டி என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய சுகாதார துறை முடிவு செய்துள்ளது.

நேற்று சட்டசபை நடைபெறும் மைய மண்டபம் மூடப்பட்டு சட்டசபை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து திறந்த வெளியில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி சட்டசபை வளாகம் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.

Tags:    

Similar News