செய்திகள்
புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து

திறந்த வெளியில் நடக்கிறது புதுச்சேரி பேரவை கூட்டம்

Published On 2020-07-25 10:55 IST   |   Update On 2020-07-25 10:55:00 IST
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் திறந்த வெளியில் நடைபெறும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பேரவை கூட்டம் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் திறந்த வெளியில் மதியம் 12.30க்கு நடைபெறும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.

Similar News