செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னை போலீசில் பெண் உதவி கமிஷனர் உள்பட 12 பேருக்கு புதிதாக தொற்று

Published On 2020-05-28 01:30 GMT   |   Update On 2020-05-28 01:30 GMT
சென்னை போலீசில் 278 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று புதிதாக 12 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மக்களை கோடை வெயில் ஒரு புறம் வாட்டி வதைக்கிறது. இன்னொரு புறம் கொரோனாவும் தாக்கி வருகிறது. கொடூரமான கொரோனா காவல்துறை மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது. சென்னை போலீசில் கூடுதல் கமிஷனர் மற்றும் 2 துணை கமிஷனர்கள், 5 உதவி கமிஷனர்கள், 10-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உள்பட 278 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 290 ஆக உயர்ந்தது. நேற்றைய பாதிப்பில் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் உதவி கமிஷனரும் ஒருவர். போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. முறையான மருத்துவ சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். பூரண குணம் பெற்றவர்கள் அலுவலகம் திரும்பி மீண்டும் பணியிலும் சேருகிறார்கள். சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் தங்கி இருந்த சென்னை போலீஸ் துறையைச் சேர்ந்த 74 பேரில், 71 பேர் நேற்று முன்தினம் குணமடைந்து வீடு திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News