செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

மோப்ப நாய் பிரிவில் பணியாற்றும் காவலருக்கு கொரோனா தொற்று

Published On 2020-05-01 15:28 IST   |   Update On 2020-05-01 15:28:00 IST
அரியலூர் மாவட்டத்தில் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு கடந்த திங்கட்கிழமை முதல் படிப்படியாக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கடந்த செவ்வாய்க்கிழமை மோப்ப நாய் பிரிவில் பணியாற்றும் காவலர்கள் உள்ளிட்ட 10 பேரின் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டது. அதில் 35 வயது மோப்ப நாய் பிரிவில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உடனடியாக திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றும் எட்டு காவலர்களுக்கும் உடனடியாக பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.


Similar News