செய்திகள்
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்புற கேட்டில் அனுமதி மறுப்பு குறித்த அறிவிப்பு

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் மூடல்

Published On 2020-03-18 12:00 IST   |   Update On 2020-03-18 12:00:00 IST
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் மூடப்பட்டுள்ளது. வருகிற 31-ந்தேதி வரை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகன்நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. ஐ.நா. சபையால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டு உலகிலேயே பெரியதாக போற்றப்படுகிறது.

இந்த கோவிலுக்கு அனைத்து நாட்களிலும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த கோவிலில் பக்தர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆகமவிதிகளின்படி கோவிலில் நான்கு கால பூஜைகள் மட்டுமே நடைபெறும். வருகிற 31-ந்தேதி வரை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கங்கைகொண்ட சோழபுரம் வரலாற்றில் கோவில் மூடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Similar News