செய்திகள்
கொரோனா வைரஸ்

துபாயில் இருந்து சென்னை வந்த நாகை வாலிபருக்கு கடும் காய்ச்சல்: கொரோனா அறிகுறியா?

Published On 2020-03-11 14:57 IST   |   Update On 2020-03-11 14:57:00 IST
துபாயில் இருந்து சென்னை வந்த நாகை வாலிபருக்கு கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால் அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆலந்தூர்:

துபாயில் இருந்து சென்னைக்கு இன்று காலை 9 மணி அளவில் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளுக்கு சுகாதார ஊழியர்கள் பரிசோதனை செய்தனர்.

அப்போது நாகை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தது.

இதையடுத்து அவரை பாதுகாப்பாக சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை கொரோனா வைரஸ் தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவரது சளி மற்றும் ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு இருக்கிறது. பரிசோதனை முடிவிலேயே அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும். அவரை தனி வார்டில் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

அவர் கடந்த 2 ஆண்டுகளாக குவைத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது அவர் திரும்பி வந்த போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அவருடன் விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளுக்கும் தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

Similar News