செய்திகள்
துப்பாக்கியை காட்டி மிரட்டி காரை கடத்திய கும்பல்

ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரை கடத்திய கும்பல்

Published On 2020-03-10 12:05 IST   |   Update On 2020-03-10 12:05:00 IST
ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரை கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் செல்லும் சாலையில் நேற்று காலை ஒரு சொகுசு கார் வேகமாக சென்றது.

அப்போது காரை பின் தொடர்ந்து ஒரு புல்லட் பைக் வேகமாக வந்தது. பைக்கில் வந்த இரண்டு மர்மநபர்கள் திடீரென காரை வழிமறித்து அதில் இருந்த 3 வாலிபர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.

இதனால் காரில் வந்த 3 பேரும் பயந்து வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஒடி விட்டனர். பின்னர் பைக்கில் வந்த மர்ம நபர்களில் ஒருவன் காரை கடத்தி சென்றான்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பொது மக்கள் பீதியில் அலறி அடித்து ஓடினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதை வைத்து அவர்களை தேடி வருகின்றனர்.

காரில் இருந்து தப்பி ஓடிய 3 பேரும் எங்கு போனார்கள் என்று தெரிய வில்லை.? அவர்கள் யார்? கடத்தப்பட்டார்களா? ரவுடி கும்பலா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News