செய்திகள்
இரண்டாவது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்திய காட்சி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2020-02-22 14:21 GMT   |   Update On 2020-02-22 14:21 GMT
ஈரோடு மாவட்டத்திலும் முஸ்லிம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அந்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் முஸ்லிம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மதரசா பள்ளிக்கூட சாலையில் நேற்று மாலை முஸ்லிம்கள் திடீரென திரண்டு வந்தனர். இதில் பெண்களும் அதிக அளவில் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி வரை அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் அதே பகுதியில் முஸ்லிம்கள் திரண்டு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News