செய்திகள்
கலெக்டர் காரை வழி மறித்து கலெக்டரிடம் மனு கொடுத்த ராஜ்

எனது சொத்தை என் மகள் அபகரித்துக் கொண்டாள் - கலெக்டரிடம் கதறி அழுத தந்தை

Published On 2020-02-18 06:21 GMT   |   Update On 2020-02-18 06:21 GMT
ஈரோடு அருகே சொத்தை தன் மகள் அபகரித்துக் கொண்டதாக கலெக்டரின் காரை மறித்து தொழிலாளி கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக கொடுத்தனர்.

பின்னர் கலெக்டர் கதிரவன் தனது காரில் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது கலெக்டரின் காரை மறித்து பெருந்துறை கிரேசி நகரை சேர்ந்த ஒருவர் கண்ணீர் மல்க மனு கொடுத்தார் .

எனது பெயர் ராஜ்(வயது 63) கூலி வேலை செய்து வருகிறேன் எனக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான் தனியாக வசித்து வருகிறேன்.

எனக்கு இளைய மகள் உதவிகள் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 18 -ந் தேதி கீழே விழுந்ததில் எனக்கு கால் ஒன்று உடைந்தது. இளைய மகள் திடீரென எனது நிலம் சொத்து பணம் ஆவணங்களை என்னிட மிருந்து அபகரித்துக்கொண்டார்.

தற்போது வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறேன். எனவே எனது இளைய மகள் என்னிடம் அபகரித்த சொத்துகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

மனுவை அவரிடமிருந்து வாங்கி கொண்ட கலெக்டர் கதிரவன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் மேலும் அந்த தொழிலாளியின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்வதாக கூறினார்.

இதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த தொழிலாளி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News