செய்திகள்
கோப்பு படம்

கடைகளுக்கு பிளாஸ்டிக் பை சப்ளை - வியாபாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

Published On 2020-02-06 06:31 GMT   |   Update On 2020-02-06 06:31 GMT
காஞ்சிபுரம் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கடைகளுக்கு சப்ளை செய்த வியாபாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் பாவாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் வீதிவீதியாக சென்று காஞ்சிபுரத்தில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவைகளை விற்பனை செய்து வருவதாக காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் முத்து, சுகாதார ஆய்வாளர் குமார், பிரபாகரன், இக்பால் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஐயப்பன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது வீடு மற்றும் காரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் போன்றவைகள் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தன்ர். மேலும் தடை விதிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததற்காக வியாபாரி ஐயப்பனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News