இந்தியா

உயரும் பெங்களூரு மெட்ரோ ரெயில் கட்டணம்: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கண்டனம்

Published On 2026-01-17 16:13 IST   |   Update On 2026-01-17 16:13:00 IST
  • கடந்த 2025-ல் அதிகபட்சமாக 90 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது.
  • தற்போது பிப்ரவரி 1 முதல் 5 சதவீதம் அதிகரிக்கப்படும் என அறிவிப்பு.

நாட்டிலேயே பெங்களூரு மெட்ரோ விலையுயர்ந்த மெட்ரோவாகியுள்ளது என பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கர்நாடக மாநில அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தேஜஸ்வி சூர்யா கூறியதாவது:-

டெல்லி, மும்பை மற்றும் சென்னை மெட்ரோவை விட பெங்களூரு மெட்ரோவில் பயணம் செய்ய அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. கட்டணத்தை நிர்ணயிப்பதில் உள்ள முரண்பாடு இந்த விலை உயர்வுக்கு காரணம்.

மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ரெயில் இயக்கப்படுவதால் மற்றும் பாராமரிப்பு காரணமாக அடுத்த மாசம் ஐந்து சதவீதம் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. கட்டுமான வேலை தொடர்ந்து தாமதப்படுத்துதல் காரணமாக திட்டத்தின் செலவு அதிகரிப்பதுதான் இழப்பிற்கு முக்கிய காரணம். கட்டணம் உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

பத்து மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்ட கடைசி கட்டண உயர்வின் தாக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பே, மாநில அரசும் பிஎம்ஆர்சிஎல் நிறுவனமும் மற்றொரு 5 சதவீத கட்டண உயர்வை முன்மொழிந்துள்ளன. இது பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இவ்வாறு தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.

FCC பரிந்துரையின்படி பிஎம்ஆர்சிஎல் மாற்றியமைக்கப்பட்ட ரெயில் கட்டணத்தை கடந்த 2025-ல் அறிமுகப்படுத்தியது. அப்போது டிக்கெட் விலை சில வழிகளில் 71 சதவீதம் வரை உயர்த்தப்படடது. அதிகபட்சமாக 90 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு வழங்கப்படும் இந்தத் தண்டனை மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனவும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.

Tags:    

Similar News