செய்திகள்
மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய கணவன் கைது
சீர்காழியில் திருமணமான 2 மாதத்தில் மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி கீழ மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 34). இவர் மயிலாடுதுறையில் டிராக்டர் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள் (26). இவர்களுக்கு திருமணமாகி 2 மாதம் ஆகிறது. தனிகுடித்தனம் நடத்தி வந்தனர்.சம்பவத்தன்று மாரியம்மாள் வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த சீர்காழி போலீசார் மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாரியம்மாளின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரில், எனது மகளின் சாவில் மர்மம் உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரியம்மாள் கழுத்து நெறிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பாலுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாலு மாரியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று நடந்த தராறில் பாலு ஆத்திரம் அடைந்து மாரியம்மாளின் கழுத்தை நெறித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்ததாக நாடமாடியது தெரியவந்தது.
இதையடுத்து மனைவியை கொலை செய்த பாலுவை போலீசார் கைது செய்தனர். மேலும் திருமணமாகி 2 மாதமே ஆவதால் மயிலாடுதுறை கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.