செய்திகள்
லாரியில் கடத்தப்பட்ட ரே‌ஷன் அரிசியை படத்தில் காணலாம்

ஈரோட்டில் லாரியில் 12 டன் ரே‌ஷன் அரிசி கடத்தல் - 5 பேர் கும்பல் கைது

Published On 2020-01-29 12:09 GMT   |   Update On 2020-01-29 12:09 GMT
ஈரோடு அருகே லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

கோபி பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர், பங்காரு பேட்டை பகுதிக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் திலகவதி தலைமையிலான போலீசார் கோபி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு லாரியும், ஆம்னி வேன் வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரியிலும், வேனிலும் 12 டன் ரே‌ஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது.

பின்னர் லாரி, வேனில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அம்மாபேட்டை, சித்தார் பகுதியைச் சேர்ந்த சாம்சன் (வயது 49), நம்பியூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30), அழுகுளி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (32), ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (31), சென்னை வெல்லூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (50) ஆகியோர் என தெரியவந்தது.

இவர்கள் யாருக்காக ரே‌ஷன் அரிசியை கடத்தி செல்கிறார்கள் என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும் ஆம்னி வேனும், 12 டன் ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News