செய்திகள்
குண்டர் சட்டம்

குழந்தையை கொன்ற வழக்கு: தாய், கள்ளக்காதலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2020-01-28 14:37 GMT   |   Update On 2020-01-28 14:37 GMT
3-வது திருமணத்துக்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த வழக்கில் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வேலூர்:

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மொட்டைமலை முருகன் கோவில் அடிவாரத்தில் இறந்த நிலையில் 6 மாத பச்சிளம் குழந்தையின் உடலை கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதி வேலூர் தாலுகா போலீசார் மீட்டனர். இது குறித்து தாலுகா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் 3-வது திருமணத்துக்கு இடையூறாக இருந்த தனது பச்சிளம் குழந்தையை கொலை செய்ய பெற்ற தாயே கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் தாயான ஆற்காடு தாழனூர் சத்திரத்தை சேர்ந்த மஞ்சுளா (20) குழந்தையை கொன்ற அவரது கள்ளக்காதலன் வரகூர் புதூர் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி (வயது 23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு எஸ்.பி பிரேவஷ்குமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து ராஜாமணி மற்றும் மஞ்சுளாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதற்கான நகல் சிறை போலீசார் மூலம் 2 பேரிடமும் தனித்தனியாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News