செய்திகள்
பொதுக்கூட்டத்தில் கி வீரமணி பேசியபோது எடுத்த படம்.

தமிழகம் முழுவதும் நீட் தேர்வை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும்- கி.வீரமணி பேச்சு

Published On 2020-01-27 10:14 GMT   |   Update On 2020-01-27 10:14 GMT
தமிழகம் முழுவதும் நீட்தேர்வு தேவை இல்லை என போராட்டங்கள் பெருமளவில் நடத்தபடும் என்று கி வீரமணி பேசியுள்ளார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் திராவிட கழகம் சார்பாக நீட்தேர்வு எதிர்ப்பு பரப்புரை தமிழகம் முழுவதும் நடத்துகின்றனர். நேற்று மாலை நகராட்சி முன்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட கழகம் தலைவர் கி.வீரமணி அவர்கள் நீட் தேர்வு எதிர்த்து சிறப்புரையாற்றினார்.

100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு குலக்கல்வி முறையை திரும்பவும் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயபடுத்தியுள்ளது. நுழைவு தேர்வுகளை அந்தந்த பல்கலைகழகம் மாநில அரசின் கட்டுபாட்டில் நடைபெறுவது வழக்கம். இதை மாற்றி பழைய முறையில் சிபிஎஸ்சி முறையில் பயின்றவர்களுக்கு எளிதாகவும் மாநில மொழியாகிய தமிழில் பயிலும் மாணவர்கள மருத்துவ தேர்வு நீட்தேர்வில் தோல்விஅடைகின்றனர். இதில் தமிழக மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் மருத்துவ கல்லூரியில் வெளிமாநிலத்தவர் பயில்வது கண்டிக்கத்தக்கது.

பழைய முறையை கொண்டு வருவதற்காக இம்முறையை கொண்டு வந்துள்ளனர். இதில் நம்பிள்ளைகள் மருத்துவராக வருவது சாத்தியமில்லை .

அதே போல் தற்பொழுது அறிவித்துள்ள ஒரே நாடு,ஒரே மொழி, என்று அறிவிப்பது நம்தமிழர்களின் உரிமையை முழுவதும் தங்கள் கையக படுத்துவது 5-ம் வகுப்புக்கும் 8-ம் வகுப்புக்கும் பொதுதேர்வு என்பது ஏற்கனவே பள்ளிக்கு ஏழை பிள்ளைகளை பள்ளிகூடங்களில் படிக்க வைப்பது எத்துனை கடினம் என ஆசிரியர்களுக்கு தெரியும்.

இந்நிலையில் 5 வகுப்பு பொதுதேர்வு என்றால் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வரமாட்டார்கள். இதன் முன்னோட்டமாக நீட்தேர்வு அறிவித்துள்ளனர். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வு அறிவித்த போது தமிழகத்திற்கு தேவையில்லை என்றார். அதனால் ஒருவருடம் நீட் தேர்வு இல்லாமல் இருந்தது. அவர் மறைவுக்கு பின் நீட்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே விரைவில் தமிழகம் முழுவதும் நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவை இல்லை என போராட்டங்கள் பெருமளவில் நடத்தபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News