செய்திகள்
அமைச்சர் கருப்பணன்

ரஜினி பேச்சு ஒரு போதும் எடுபடாது - அமைச்சர் கருப்பணன்

Published On 2020-01-23 11:33 GMT   |   Update On 2020-01-23 11:33 GMT
நடிகர் ரஜினிகாந்த் பேசி வருவதை யாரும் பெரிதாக எடுத்துக்ககொள்ள வேண்டாம் எனவும் அவர் பேச்சு ஒருபோதும் எடுபடபோவது இல்லை எனவும் அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது.

இதில் தமிழக சுற்றுசுழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சாயக்கழிவு நீர் பிரச்சினை என்பதை இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருப்பூரில் உள்ளது போல் ஈரோட்டில் 5 இடங்களில் சுத்திகரிப்பு நிலையமும் பவானியில் 2 சுத்திகரிப்பு நிலையம் என 7 நிலையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1200 கோடி மதிப்பில் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. 25 சதவீத மானியம் மாநில அரசால் வழங்கப்படும். மீதி 25 சதவீதம் சாயப்பட்டறை உரிமையாளர்கள் கொடுக்க வேண்டும்.

சாயக்கழிவு எங்கும் ஓடவில்லை. தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுதான் வருகிறது.

மேலும் சாயக்கழிவு பிரச்சினைக்கு விரைவில் ஒரு நிரந்தர முடிவு எட்டப்படும்.

நடிகர் ரஜினிகாந்த் என்னஎன்னவெல்லாம் பேசி வருகிறார். அதையாரும் பெரிதாக எடுத்துக்ககொள்ள வேண்டாம். அவர் பேச்சு ஒருபோதும் எடுபடபோவது இல்லை.

இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார்.
Tags:    

Similar News