செய்திகள்
மனு கொடுக்க வந்த குள்ளமான தம்பதியை படத்தில் காணலாம்

எங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் - குள்ளமான தம்பதி மனு

Published On 2020-01-20 09:59 GMT   |   Update On 2020-01-20 09:59 GMT
கருணை அடிப்படையில் எங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என குள்ளமான தம்பதி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது27). ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (29). இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் குள்ளமான தம்பதிகள்.

இந்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு சரண்யா தனது கணவர் கார்த்திகேயன் உடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

நான் பி.ஏ., பி.எட்., முடித்துள்ள பட்டதாரி. எனது கணவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துள்ளார். அவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார் அதில் போதிய வருமானம் இல்லை வறுமையான சூழ்நிலை நிலவி வருவதால் எங்கள் இருவருக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News