செய்திகள்
பனிமூட்டம்

கடும் பனிமூட்டம்- 10 சென்னை விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

Published On 2020-01-03 08:36 GMT   |   Update On 2020-01-03 08:36 GMT
கடும் பனிமூட்டம் காரணமாக திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த விமானங்கள் உள்பட மொத்தம் 10 சென்னை விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.

இதனால் காலை சென்னை விமான நிலையத்துக்கு கோலாலம்பூர், அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய இடங்களில் இருந்து வரும் வெளிநாட்டு விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்னையில் தரை இறங்க அனுமதிக்கவில்லை. இதுபோல் திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த விமானங்கள் உள்பட மொத்தம் 10 சென்னை விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.

சென்னை விமான நிலைய ஓடுபாதையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் இன்று காலை சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, மலேசியா, சிங்கப்பூர், டெல்லி, ஐதராபாத், மும்பை, திருவனந்தபுரம் செல்ல வேண்டிய 23 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பனி மூட்டம் காரணமாக காலை 6 மணி முதல் 8 மணிவரை சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வழக்கம் போல் விமானங்கள் வந்து சென்றன.
Tags:    

Similar News