செய்திகள்
ஓட்டுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட கலெக்டர் கதிரவன்

சென்னிமலை மையத்தில் காலதாமதம் ஏற்பட்டதால் ஓட்டுகளை பிரித்துக்கொடுத்த கலெக்டர்

Published On 2020-01-03 04:36 GMT   |   Update On 2020-01-03 04:36 GMT
சென்னிமலை யூனியன் தேர்தலில் ஓட்டுக்கள் பிரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் மாவட்ட கலெக்டர் கதிரவன் நேரில் வந்து ஓட்டுகளை பிரித்துக் கொடுத்தார்.
சென்னிமலை:

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 22 கிராம ஊராட்சி 14 யூனியன் வார்டு மற்றும் கிராம ஊராட்சிகள் வார்டு 186, மாவட்ட ஊராட்சிகள் வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணியளவில் துவங்கியது முதல் கட்டமாக வடமுகம், வெள்ளோடு, புங்கம்பாடி. குமாரவலசு ஆகிய ஊராட்சிகளில் பதிவான ஓட்டுகள் பிரிக்கப்பட்டது.

இந்த பணி முடிய 2.30 மணி நேரம் ஆகி காலை 10:30 மணிக்கு தான் ஓட்டுகள் எண்ணும் பணிகள் தொடங்கியது. ஓட்டுகள் பிரிக்கும் பணி 5 கட்டமாக நடக்க இருந்த நிலையில் மூன்றாம் கட்ட ஓட்டு பிரிக்கும் பணி மாலை 5 மணி வரை தொடங்கவில்லை. இந்த தகவல் அறிந்து வந்த மாவட்ட கலெக்டர் கதிரவன், திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஆர்.டி.ஒ. முருகேசன் ஆகியோர் வந்து ஓட்டுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன் பின்பு பணிகள் சுறுசுறுப்படைந்தது இரவு 12.40 மணி அளவில் அனைத்து ஓட்டுகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.



Tags:    

Similar News