செய்திகள்
கோப்பு படம்

வாக்குச்சாவடியில் தகராறில் ஈடுபட்ட தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 16 பேர் மீது வழக்கு

Published On 2019-12-31 12:17 GMT   |   Update On 2019-12-31 12:17 GMT
சீர்காழியில் முதல் கட்ட ஊராட்சி தேர்தலில் வாக்குச்சாவடியில் தகராறில் ஈடுபட்ட தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சிகளான ஆணைக் காரசத்திரம், எடமணல், அரசூர், புத்தூர், எருக்கூர், ஆச்சாள்புரம், நல்லூர், புதுப்பட்டினம் உள்ளிட்ட 42 ஊராட்சிகளில் முதல் கட்டமாக கடந்த 27-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

அப்போது எடமணல் ஊராட்சி வாக்குச்சாவடியில் ஸ்டாம்பு இல்லாததால் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று ஸ்டாம்பு மை வாங்க அலுவலர்கள் சென்றனர். இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்படுவதாக கூறி அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்களிலும் தி.மு.க.வினர் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த வாக்குச் சீட்டுகளை சூறையாடினர். இதனால் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஸ்டாம்பு மை வந்தவுடன் அந்த வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சீர்காழி போலீசில் ஊரக வளர்ச்சிதுறை உதவி செயற்பொறியாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஸ்ரீகணேஷ் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் ,அல்லிவிளாகம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார், நாங்கூர்திருமேனிகூடத்தை சேர்ந்த ஆனந்தம் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசுபணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News