செய்திகள்
கொள்ளிடம் ஊராட்சியில் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு
கொள்ளிடம் ஊராட்சிக்குட்பட்ட எடமணல் ஊராட்சியில் அடையாள மை இல்லாததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு தொடங்கியது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சிகளான ஆணைக்காரசத்திரம், எடமணல், அரசூர், புத்தூர், எருக்கூர், ஆச்சாள்புரம், நல்லூர், புதுப்பட்டினம் உள்ளிட்ட 42 ஊராட்சிகளில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து இன்று அதிகாலை முதல் வாக்களிப்பதாற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொள்ளிடம் ஊராட்சிக்குட்பட்ட எடமணல் ஊராட்சியில் மட்டும் நீண்ட நேரமாக வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையத்திற்குள் வாக்களிக்க அனுப்பபடாமல் இருந்தனர்.
இதையடுத்து வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் தேர்தல் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தேர்தல் அதிகாரி வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் அடையாள மை பாட்டில் இல்லை. மைபாட்டில் எடுத்துவரும்வரை காத்திருக்கும்படி கூறியுள்ளார்.
இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த வாக்காளர்கள் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று அங்கு கூடுதலாக வைக்கப்பட்டிருந்த மை பாட்டிலை கொண்டுவந்தனர். அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த சம்பவத்தால் எடமணல் ஊராட்சியில் 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு தொடங்கியது.