செய்திகள்
மரணம்

கொல்கத்தாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் மரணம்

Published On 2019-11-01 14:13 IST   |   Update On 2019-11-01 14:13:00 IST
கொல்கத்தாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்தூர்:

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு இன்று காலை விமானம் வந்துகொண்டு இருந்தது. அதில் கொல்கத்தா, ராய்ப்பூரை சேர்ந்த நசிருதீன் நிஷா (43) என்பவர் கணவர் நவுசத் அன்சாரியுடன் பயணம் செய்தார்.

நசிருதீன் நிஷா மருத்துவ சிகிச்சை பெற சென்னை வந்ததாக தெரிகிறது. நடு வானில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது நசிருதீன் நிஷாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.

இதுபற்றி விமான ஊழியர்கள் சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அந்த விமானம் சென்னையில் தரை இறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் நசிருதீன் நிஷாவை பரிசோதனை செய்தனர்.

அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News