செய்திகள்
மழை (கோப்புப்படம்)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழையால் 7 ஏரிகள் நிரம்பின

Published On 2019-10-22 06:59 GMT   |   Update On 2019-10-22 06:59 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 7 ஏரிகள் முழுவதும் நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம்:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்களில் நீர் இருப்பு அதிகரித்து வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக 7 ஏரிகள் முழுவதும் நிரம்பி விட்டன. இதே போல் 13 ஏரிகள் 70 சதவீதமும், 60 ஏரிகள் 50 சதவீதமும், 246 ஏரிகள் 20 சதவீதமும் நிரம்பி இருக்கின்றன. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை நீடித்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் ஏரிகள் அனைத்தும் நிரம்பி விடும்.

ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News