செய்திகள்
பள்ளிக்கரணையில் பேனர் வைத்த 4 பேரை ஜாமீனில் விடுவிக்க கோர்ட் பரிந்துரை
பள்ளிக்கரணையில் பேனர் வைத்ததாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட மறுத்த நீதிபதி, ஜாமீனில் விடுவிக்கும்படி பரிந்துரை செய்தார்.
ஆலந்தூர்:
சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் சென்டர்மீடியனில் வைக்கப்பட்டிருந்த பேனர் சாலையில் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் கமல்ராஜ் பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். அதன்படி, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரித்தது.
இதனால் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தலைமறைவானார். ஒரு வாரத்திற்குப் பிறகு அவரை நேற்று கிருஷ்ணகிரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, பேனர் கட்டியதாக பழனி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார். சாலையில் பேனர்கள் வைக்க அனுமதி பெறப்பட்டதா? என நீதிபதி கேட்டதற்கு, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று 4 பேரும் கூறினர்.
அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், சிறையிலடைக்கும்படி உத்தரவிட நீதிபதி மறுத்தார். எளிதில் ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் 4 பேரையும் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கும்படி பள்ளிக்கரணை போலீசாருக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.