செய்திகள்

வேலூர் கலெக்டர் ஆபீசில் வன அதிகாரி மனைவி 2 மகன்களுடன் தீக்குளிக்க முயற்சி

Published On 2019-05-30 13:09 GMT   |   Update On 2019-05-30 13:09 GMT
வேலூர் கலெக்டர் ஆபீசில் வன அதிகாரி மனைவி 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்:

ஆற்காடு தாலுகா பூகனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா அமிர்தி வனச்சரக அலுவலராக பணியாற்றினார். தற்போது சஸ்பெண்டாகி உள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி மெர்லின்மாலதி (38). அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 20-ந்தேதி மெர்லின்மாலதி மனு கொடுத்தார். அதில் தனது கணவர் ராஜா, வனத்துறையில் வேலை பார்த்து வந்தார்.

தற்போது சஸ்பெண்டு செய்யபட்டுள்ளார் எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து தனியாக வசித்து வருகிறார். இது பற்றி கேட்டதற்கு என்னை மிரட்டுகிறார்.

இதுபற்றி ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தேன் ஆனால் விசாரணைக்கு வரவில்லை. அடியாட்களுடன் வந்து மிரட்டுகிறார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று 2 மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மெர்லின்மாலதி மகன்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News