செய்திகள்

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் சோதனை- வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம்

Published On 2019-04-17 04:40 GMT   |   Update On 2019-04-17 04:40 GMT
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு முதல் 9 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். #ITRaids #LokSabhaElections2019 #Andipatti
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டியில் உள்ள வணிக வளாகத்தின் கீழே செயல்படும் அமமுக அலுவலகத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய 9 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1.48 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம்  94 பண்டல்கள் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பண்டல்களில் வாக்காளர் பெயர் பட்டியல், வார்டு எண்ணுடன் இருந்தது. அத்துடன் ஒரு தபால் வாக்குச்சீட்டும் கைப்பற்றப்பட்டது. அதில், அமமுக வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது.



ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மொத்தம் 2 கோடி ரூபாய் பணம் கொண்டு வந்துள்ளனர்.  வருமான வரி சோதனையின்போது, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் சிலர் பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர். #ITRaids #LokSabhaElections2019 #Andipatti
Tags:    

Similar News