செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்- டிடிவி தினகரன் பேச்சு

Published On 2019-04-04 12:36 GMT   |   Update On 2019-04-04 17:26 GMT
18 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 8 தொகுதிகளில் தோல்வியை தழுவினால் இந்த அரசு வீட்டிற்கு சென்று விடும் என்று தினகரன் பேசியுள்ளார். #dinakaran #admk #tngovt
அரவக்குறிச்சி:

கரூர் பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகே திறந்த வேனில் நின்றவாறு டி.டி.தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல்களும் இணைந்து வருகிறது. தமிழக அரசு, மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. 18 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 8 தொகுதிகளில் தோல்வியை தழுவினால் இந்த அரசு வீட்டிற்கு சென்று விடும். அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அறிவித்தால், அது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கும். 

இந்தியாவின் பிரதமரை தமிழகத்தை சேர்ந்த நீங்கள்தான் தீர்மானிக்கப் போகிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

பின்னர் தினகரன் கரூர் வெங்கமேடு பகுதியில் இரவு 9 மணிக்கு பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டிருந்தனர். ஆனால் அப்பகுதிக்கு அவரால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியவில்லை. வெங்கமேடு செல்லும்போது இரவு 10.05 ஆகி விட்டது. இதனால் டி.டி.வி. தினகரன் பிரசார வேனில் பேசாமல் நின்றபடி கூட்டத்தினரை பார்த்து வணங்கி சென்றார்.  #dinakaran #admk #tngovt
Tags:    

Similar News