செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தாசில்தாரிடம் ஒப்படைத்த காட்சி.

தக்கலை அருகே காரில் கொண்டுவரப்பட்ட 37 பவுன் நகை பறிமுதல்

Published On 2019-04-02 12:09 IST   |   Update On 2019-04-02 12:09:00 IST
தக்கலை அருகே காரில் கொண்டுவரப்பட்ட 37 பவுன் நகைகளை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள், நகைகளை திருவட்டார் தாசில்தார் சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர். #LokSabhaElections2019
நாகர்கோவில்:

பாராளுமன்ற தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 72 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். திருவட்டார் வட்ட வழங்கள் அதிகாரி வேணுகோபால் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு புலியூர்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த பேக் ஒன்றில் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகைக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

இதையடுத்து பேக்கில் இருந்த தங்க வளையல், செயின், மோதிரம், கம்மல் உள்ளிட்ட நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 37 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகையை திருவட்டார் தாசில்தார் சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த நகைகள் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த வாகன சோதனையில் ரூ.86 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று காலையில் நாகர்கோவிலில் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை மற்றும் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது.

கடந்த 14-ந்தேதி முதல் நேற்று வரை நடந்த சோதனையில் 1 கோடியே 91 லட்சத்து 73 ஆயிரத்து 911 ரொக்கப்பணமும், 327 கிராம் தங்கமும், 1 கிலோ 300 கிராம் வெள்ளியும், 11 மிக்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019



Similar News