செய்திகள்

பா.ஜ.க. கூட்டணி பற்றி ஓரிரு நாளில் முடிவு அறிவிப்பு - முரளிதரராவ்

Published On 2019-02-13 14:07 IST   |   Update On 2019-02-13 14:07:00 IST
பா.ஜ.க. கூட்டணி பற்றி ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் கூறினார். #MuralidharRao #BJP
புதுச்சேரி:

பா.ஜனதா சார்பில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய வாக்குறுதிகள் தொடர்பாக அனைத்து சமுதாய மக்களிடமும் நேரடியாக கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

புதுவை மீனவ சமுதாய மக்களின் கோரிக்கைகளை கேட்கும் நிகழ்ச்சி பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பங்கேற்று மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே போல் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது.

கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை வருகிற 14-ந் தேதி (நாளை) உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்துக்கு வந்து சென்ற பிறகு தெரிவிக்கப்படும். இன்னும் சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். #MuralidharRao #BJP

Tags:    

Similar News