செய்திகள்

கூட்டணி பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை - ஈஸ்வரன்

Published On 2019-02-12 06:25 GMT   |   Update On 2019-02-12 06:25 GMT
கூட்டணி பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கொமதேக ஈஸ்வரன் கூறியுள்ளார். #Eswaran #Parliamentelection

ஈரோடு:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தமிழகத்தை பொருத்த வரை தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. கூட்டணி என இரு முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராகி வரும் நிலையில் 3-வது கூட்டணியாக சில கட்சிகள் இணைந்து போட்டியிடவும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் கொ.ம.தே.க. எந்த அணியில் இடம் பெற உள்ளது? என்று மதில்மேல் பூனையாக உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கொ.ம.தே.க. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் கொ.ம.தே.க. பாரதிய ஜனதா அணியுடன் கூட்டணி அமைக்குமா? அல்லது தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கூட்டணி அமையாதபட்சத்தில் கொ.ம.தே.க தனித்து போட்டியிட்டது. போட்டியிட்ட பகுதிகளில் கணிசமான அளவில் ஓட்டுகள் வாங்கினாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இப்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொ.ம.தே.க. நிலைப்பாடு என்ன? என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் கேட்டபோது, “தேர்தல் கூட்டணி பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. கூட்டணி பற்றி எதுவும் கூறுவதற்கு இல்லை. இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று கூறினார். #Eswaran #Parliamentelection

Tags:    

Similar News