செய்திகள்

முத்துப்பேட்டை அருகே கணவரின் 2-வது திருமணத்தை நிறுத்த போலீசாருடன் வந்த மலேசியா பெண்

Published On 2019-01-20 11:59 GMT   |   Update On 2019-01-20 11:59 GMT
முத்துப்பேட்டை அருகே இன்று காலை நடைபெற இருந்த கணவரின் 2-வது திருமணத்தை தடுத்து நிறுத்த போலீசாருடன் வந்த மலேசியா பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பெருகவாழ்ந்தான் பகுதியை சேர்ந்தவர் முத்துகண்ணு மகன் ராஜ்குமார் (வயது 30). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு ஓட்டலில் வேலைப்பார்த்து உள்ளார். அப்போது அதே ஓட்டலில் வேலைப்பார்த்த மலேசியாவை சேர்ந்த துர்காதேவிராமீஸ் (25). என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2016 ல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தனது மனைவியிடம் தான் ஊருக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெருகவாழ்ந்தானுக்கு திரும்பினார். அப்போது அவருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்து இன்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நடைபெறுவதாக இருந்தது.

15 நாட்களாக எந்த தொடர்பு கொள்ளாத தனது கணவர் ராஜ்குமார் குறித்து விசாரித்த போது அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்வது தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.


இதையடுத்து அவர் 2 நாட்களுக்கு முன்பு பெருகவாழ்ந்தானுக்கு வந்தார். பின்னர் இதுகுறித்து அவர் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. இனிகோதிவ்யனிடம் ராஜ்குமாருக்கும் தனக்கும் நடந்த திருமண குறித்த பத்திரிக்கையுடன் புகார் கொடுத்தார். அவர் இது பற்றி விசாரித்து திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு பெருகவாழ்ந்தான் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசாருடன் ராஜ்குமார் திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு இன்று காலை துர்காதேவிராமீஸ் வந்தார். அப்போது அங்கு மணமக்களின் உறவினர்கள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. ராஜ்குமார் மற்றும் மணமகள் அங்கு இல்லாததால் மண்டப வாயிலியே போலீசாருடன் திருமணத்தை நடத்து நிறுத்தும் நடவடிக்கையில் மலேசியா பெண் துர்காதேவிராமீஸ் காத்திருந்தார்.

இதனால் இன்று காலை திருமணத்துக்கு வந்த உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News