செய்திகள்

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த 13 பேர் கைது

Published On 2019-01-13 06:12 GMT   |   Update On 2019-01-13 06:12 GMT
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:

சென்னையில் போலி ஆவணங்கள் தயார் செய்து பாஸ்போர்ட், விசா எடுக்கும் கும்பல் செயல்படுவதாக போலீஸ் கமி‌ஷனருக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலி பாஸ்போர்ட் கும்பலின் நடவடிக்கை குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் போலி பாஸ்போர்ட் கும்பல் சிக்கியது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஜான் பிரபாகர், ஜான்சன், புதுப்பேட்டையை சேர்ந்த முகமது யூசுப், ஆவடி பட்டாபிராமை சேர்ந்த மகேஷ், கொளத்தூரை சேர்ந்த விஜய் பிரபு, சூளைமேட்டை சேர்ந்த வெங்கடேஸ்வரன், பெரம்பூரை சேர்ந்த ரவி, அயனாவரத்தை சேர்ந்த ரெஜில், கொட்டிவாக்கத்தை சேர்ந்த அனந்தராமன், வண்டலூரை சேர்ந்த சங்கர், டெல்லியை சேர்ந்த சுஜித், மும்பையை சேர்ந்த வெங்கடேஷ் நாயக், உத்தரகாண்ட்டை சேர்ந்த ஹிமான்சு மேவாரி ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயார் செய்ய பயன்படுத்திய ஆவணங்கள், 151 பாஸ்போர்ட்டுகள், லேப்-டாப், ரூ.18 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போலி பாஸ்போர்ட் கும்பல் எத்தனை பேருக்கு போலியான ஆவணங்கள் தயார் செய்து கொடுத்தது, இதன் மூலம் யார்-யார் பாஸ்போர்ட், விசா பெற்று உள்ளனர் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News