செய்திகள்

இடைத்தேர்தல் ரத்து - திருவாரூர் மக்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்கும்

Published On 2019-01-07 09:26 IST   |   Update On 2019-01-07 09:26:00 IST
இடைத்தேர்தல் இன்று ரத்து செய்யப்பட்டதால் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களின் குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. #Thiruvarurbyelection #pongalcashprize
சென்னை:

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவையடுத்து காலியாக இருந்த திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகள் இன்னும் முடியாததால் இந்த இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யுமாறு தேர்தல் கமிஷன் இன்று காலை உத்தரவிட்டது.

இதனால் அந்த தொகுதியில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளும் ரத்தாகி உள்ளது. முன்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த பொங்கல் ரொக்கப்பரிசு ஆயிரம் ரூபாய் திருவாரூர் தொகுதி மக்களுக்கு பின்னர் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றிலிருந்து அளிக்கப்படவுள்ள பொங்கல் ரொக்கப்பரிசு திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கும் சேர்த்து வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. #Thiruvarurbyelection #pongalcashprize 
Tags:    

Similar News