செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தல் பணியில் 2500 அலுவலர்கள்

Published On 2019-01-03 11:07 IST   |   Update On 2019-01-03 11:07:00 IST
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் திருவாரூர் தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு தொடங்கியுள்ளது. தேர்தல் பணிக்காக 2500 அரசு அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். #Tiruvarurbyelection
திருவாரூர்:

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

திருவாரூர் தொகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பணிகள் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் திருவாரூர் தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு தொடங்கியுள்ளது. தேர்தல் பணிக்காக 2500 அரசு அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, இலவசமாக பொருட்கள் வழங்கப்படுகிறதா? என பறக்கும் படையினரும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர் தொகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், லாட்ஜ்களையும் தீவிரமாக பறக்கும் படையினர் கண்காணித்து வருகிறார்கள். #Tiruvarurbyelection


Tags:    

Similar News