செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி.யில் சாப்பாட்டு அறையில் பிரிவினை காட்டுவதா?- முத்தரசன் கண்டனம்

Published On 2018-12-15 09:23 GMT   |   Update On 2018-12-15 09:23 GMT
சென்னை ஐஐடி உணவுக் கூடத்தில் சைவ உணவு உண்போருக்கும் அசைவ உணவு உண்போருக்கும் தனித்தனியான நுழைவு வாயிலும், வெளியேறும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #ChennaiIIT #Mutharasan
சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை ஐ.ஐ.டி உணவுக் கூடத்தில் சைவ உணவு உண்போருக்கும் அசைவ உணவு உண்போருக்கும் தனித்தனியான நுழைவு வாயிலும், வெளியேறும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளன. உணவை உண்பதற்கு தனித்தனியான தட்டுகளும், பாத்திரங்களும் வழங்கப்படுகின்றன. கை கழுவும் இடங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, அதை அறிவிக்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தின் இச்செயல் அப்பட்டமான சாதீய பாகுபாடாகும். பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கும், பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மற்றும் பட்டியல் பழங்குடியின சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரான இச்சாதீய ரீதியான பாகுபாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது. சாதீய பாகுபாட்டை கடைபிடிக்கும் இக்கல்லூரி நிர்வாகம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். #ChennaiIIT #Mutharasan
Tags:    

Similar News