செய்திகள்

மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற வியாபாரிக்கு ஜெயில்- வேலூர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2018-11-04 11:07 GMT   |   Update On 2018-11-04 11:07 GMT
மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற வியாபாரிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி வேலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

வேலூர்:

குடியாத்தம் தாலுகா தாழையாத்தம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 36). காய்கறி வியாபாரி. இவருடைய மனைவி ரேணுகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சதீசுக்கும் (35) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

இதனையறிந்த ஜெயபால், மனைவி ரேணுகாவை கண்டித்து கள்ளக்காதலை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் அதனை கைவிடாமல் ஜெயபாலுக்கு தெரியாமல் சதீசுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் சதீஷ் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி ரேணுகாவை அவரது வீட்டில் சந்திந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த ஜெயபால் அதனை கண்டு ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்தியால் சதீசை சரமாரியாக குத்தினார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர். அவர் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை மாவட்ட நீதிபதி ஆனந்தி விசாரித்தார்.

நேற்று அவர் இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். அதில், சதீசை கத்தியால் குத்திக் கொலை செய்த ஜெயபாலுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை வழங்கினார்.

இதையடுத்து அவர் பலத்த போலீஸ் காவலுடன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News