செய்திகள்

ஹஜ் பயணத்துக்கு தமிழகத்தில் இருந்து அதிகமானோர் செல்ல அனுமதிக்க வேண்டும்

Published On 2018-10-20 03:42 IST   |   Update On 2018-10-20 03:42:00 IST
தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்துக்கு இந்த ஆண்டு அதிகமானோர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரியிடம் இந்திய ஹஜ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:

2019-ம் ஆண்டு ஹஜ் யாத்திரை குறித்த ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள ஹஜ் ஹவுசில் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திய ஹஜ் சங்க தலைவர் அபுபக்கர் கலந்து கொண்டு, ஹஜ் பயணம் குறித்த முன்னேற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கினார்.

மேலும், கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 3,865 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டதாகவும், இந்த ஆண்டு மேலும் அதிகமானோர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுத்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மெக்கா முதல் மதினா வரை புல்லட் ரெயில் சேவை தொடங்கி இருக்கும் சவுதி அரேபியா அரசுக்கு இந்த கூட்டத்தில் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், ஹஜ் ஹவுசின் 18-வது மாடியில் 100 அடி உயர கம்பத்தில் இந்திய தேசிய கொடியை மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, இந்திய ஹஜ் சங்க தலைவர் அபுபக்கர் ஆகியோர் ஏற்றி வைத்தனர். #tamilnews
Tags:    

Similar News