செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் நோயாளியை சைக்கிள் ஸ்டேண்டில் தூக்கி வீசிய ஊழியர்கள்

Published On 2018-10-02 15:14 GMT   |   Update On 2018-10-02 15:14 GMT
சேலம் அரசு மருத்துவமனையில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளியை ஊழியர்கள் சைக்கிள் ஸ்டேண்டில் தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் மேரி (வயது 67). இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் மேரி சேலத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு ஆஸ்துமா நோய் அதிகமானது. இதையடுத்து அவரை உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நேற்று நள்ளிரவில் மேரி கடுமையாக இருமினார். அவர் விடாமல் இருமி கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த ஊழியர்கள் மேரியை தூக்கிக் கொண்டு சென்று மகப்பேறு பிரிவு அருகில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டில் வீசிவிட்டு சென்றனர்.

இதனால் இரவு முழுவதும் அவர் கதறி அழுதபடி இருந்தார். இன்று காலை ஆஸ்பத்திரிக்கு வந்த பொது மக்கள் மேரியின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தவர்களிடம் எப்படி நோயாளியை வெளியில் தூக்கி வீசலாம் என்று கேட்டு சண்டை போட்டனர். இதையடுத்து மேரியை மீண்டும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை சைக்கிள் ஸ்டேண்டில் தூக்கி வீசிய ஊழியர்கள் யார் என்று தெரியவில்லை.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News