செய்திகள்
வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் குப்பை கூடைகளை கவர்னர் வழங்கிய போது எடுத்த படம்

சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது - புதுவை கவர்னர் கிரண்பேடி

Published On 2018-09-29 06:49 GMT   |   Update On 2018-09-29 06:49 GMT
சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பானது ஆண்-பெண் இருவருக்கும் சம உரிமை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார். #SabarimalaVerdict #Kiranbedi
புதுச்சேரி:

புதுவை நேரு வீதி, ரங்கப்பிள்ளை வீதிகளில் குப்பைகளை கொட்டாமல் இருக்க அங்குள்ள கடைக்காரர்களுக்கு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் குப்பை கூடை வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டு கடைக்காரர்களுக்கு குப்பை கூடைகளை வழங்கினார்.

இதில், சிவா எம்.எல்.ஏ., மாநில வணிகர்கள் கூட்டமைப்பு சங்க தலைவர் சிவசங்கர் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-



சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நூற்றாண்டு காலமாக மனிதர்களுக்குள் இருந்த தவறான பிரிவினை நீக்கப்பட்டு உள்ளது.

ஆண், பெண் இருபாலருக்கு இடையே பாகுபாடு இருக்கக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பானது ஆண்-பெண் இருவருக்கும் சம உரிமை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

மேலும் தகாத உறவு குற்றம் அல்ல என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிலும் ஆண்-பெண் இருவருக்கும் சமஉரிமை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.  #SabarimalaVerdict #Kiranbedi
Tags:    

Similar News