செய்திகள்

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2018-09-24 07:24 GMT   |   Update On 2018-09-24 07:24 GMT
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. #ThirumuruganGandhi

வேலூர்:

மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஐ.நா. சபை கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசிவிட்டு நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை வயிற்று போக்கு, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை இன்று காலை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இது குறித்து திருமுருகன் காந்தியின் ஆதரவாளர்கள் கூறியதாவது:-

கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஜெயிலில் அடைக்கபட்ட திருமுருகன் காந்தியை வாரத்துக்கு 3 நாட்கள் சென்னை கோர்ட்டுக்கு அழைத்து செல்கின்றனர். மேலும் சீர்காழி தூத்துக்குடி கோர்ட்டுக்கும் அழைத்து செல்லப்படுகிறார். தொடர்ந்து அவரை அலைக்கழித்து வருவதால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றனர். #ThirumuruganGandhi

Tags:    

Similar News